யாழ்ப்பாணப் பகுதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் ஜெனரலும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரதான அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த அலுவலகத்தில் தீவிர விசாரணைகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை வடக்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கான பின்னணி குறித்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது விசாரணைகளின் காரணங்கள் குறித்தும் மேலதிக தகவல்களைப் புலனாய்வுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.







