ஞானசார தேரரின் மனு விசாரணை ஒத்திவைப்பு

35
0
Spread the love

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று (22) நீதியரசர்களான அமல் ரணராஜா, மகேன் கொபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்தது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, சிறைச்சாலை ஆடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை தொடர்பான தீர்மானத்தைச் சட்டரீதியாகச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குழுவினர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வழக்கில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நவம்பர் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here