முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது 6.97 ஏக்கர் காணி

28
0
Spread the love

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாகக் காணப்பட்ட சுமார் 6.97 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 22.10.2026 அன்று நடைபெற்ற இந்த நில ஒப்படைப்பு நிகழ்வானது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளால் முறைப்படி அளவிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் அவர்களின் நேரடி முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவைப்படாத நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை படிப்படியாக உரிய உரிமையாளர்களிடமும் பொதுப் பயன்பாட்டுக்காகவும் வழங்கும் அரசின் கொள்கை முடிவின் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை விடுவிப்பதற்குத் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here