ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தத் தகவல் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான தகவல் மூலங்கள் ஊடாக உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் இவ்வாறான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.







