இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒருநாள் விஜயமாக மன்னாருக்குச் சென்றிருந்த சுகாதார அமைச்சர், விபத்து தொடர்பான தகவலை அறிந்ததும் பேசாலை வைத்தியசாலைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இராணுவ வீரர்களை நேரில் பார்வையிட்டுள்ளார்

விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
உயிரிழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்போம்.







