நேற்று (13.06) வெள்ளிக்கிழமை இரவு, யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் துசியந்தன் என்னும் இளைஞரே இவ்வாறு வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய்பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.







