லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்த விலைத் திருத்தம் ஒக்டோபர் 25ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, இதுவரை 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை தற்போது 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, சினோபெக் நிறுவனமும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் 95 ஒக்டேன் பெற்றோலைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களின் எரிபொருள் செலவு அதிகரிக்கவுள்ளது.







