தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மாயமாகி இரண்டு வாரங்களாகியும் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் தாயாருடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானதைத் தொடர்ந்து, உள்ளூர் பொலிஸாரிடம் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். இருப்பினும், பொலிஸாரின் நீண்டநாட்கள் தேடுதல் வேட்டையிலும் எவ்விதத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது காஞ்சிபுரம் சிபிசிஐடி டி.எஸ்.பி வேல்முருகன் தலைமுறையிலான அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுமியின் உடல் எதுவும் கண்டெடுக்கப்படாததால் அவர் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறுமியின் தாயாரிடமும் மயக்க மருந்து தெளித்து ரயில் நிலையங்கள் வழியாகக் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







