யாழ்ப்பாணத்தில் நயினாதீவில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி

24
0
Spread the love

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகபட்சமாக நயினாதீவு பகுதியில் 122.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி த. பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று திங்கட்கிழமை காலை 8 மணி வரையிலான 12 மணித்தியால இடைவெளியில் இந்த மழை பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் (27.10.2026) தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ள நிலையில், அச்சுவேலியில் 111.7 மில்லிமீற்றரும், பருத்தித்துறையில் 108.8 மில்லிமீற்றரும், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் 101.1 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கிடையில், வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிவரும் ‘அர்னாப்’ தீவிர புயல் மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கையைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப் புயல் காரணமாகக் கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here