கணவனைத் துண்டு துண்டாக வெட்டி ட்ரமுக்குள் சிமெண்ட் ஊற்றிக் கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு மரண தண்டனை!

73
0
Spread the love

பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் இந்தியா திரும்பிய கணவரைக் காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து, உடலை டிரம்மில் அடைத்து சிமெண்ட் கலவையால் மூடிய மனைவி மற்றும் அவரது காதலனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கொடூரக் கொலையின் பின்னணி என்ன?
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput), பிரித்தானியாவில் கடற்படைச் சரக்குக் கப்பல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மனைிக்கு இன்ப அதிர்ச்சி (Surprise) கொடுப்பதற்காக கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்துள்ளார். ஆனால், மார்ச் 4ஆம் திகதியிலிருந்து அவர் திடீரென மாயமானார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில், சௌரப்பின் மனைியான முஸ்கன் ரஸ்தோகி (Muskaan Rastogi) மற்றும் அவரது காதலன் சாஹில் ஷுக்லா (Sahil Shukla) ஆகியோர் இணைந்து சௌரப்பைக் கொடூரமாகக் கொலை செய்தமை தெரியவந்தது. கொலை செய்தபின் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மிற்குள் போட்டு, மேல் சிமெண்ட் கலவையால் அவர்கள் மூடியுள்ளனர். “அப்பா டிரமுக்குள் இருக்கிறார்” என்று அவர்களின் சிறு வயது குழந்தை கூறிய தகவலே விசாரணையில் முக்கியத் துப்புத் துலங்க உதவியதாகக் கூறப்படுகின்றது.

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இவ்வழக்கை விசாரித்த மீரட் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முஸ்கன் ரஸ்தோகி மற்றும் சாஹில் ஷுக்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து புதன்கிழமையன்று தீர்ப்பளித்தது.

கொலைக் குற்றத்திற்காக ஆளுக்கு 50,000 ரூபாயும், சாட்சியங்களை அழித்த குற்றத்திற்காக 20,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்த குற்றவாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் உண்பதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகள் செய்த இந்தத் கோரமான குற்றத்திற்காக, சௌரப் ஒரு நல்ல மனிதர் என்றும் தன் மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்க்கப் போவதில்லை என்றும் முஸ்கனின் பெற்றோரே முன்னதாகத் தெரிவித்திருந்ததுடன், கைதுக்குப் பின் அவர்கள் மகளைத் தேடிச் சென்று பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here