இன்றும் பிற்பகல் வேளையில் பலத்த மழை!

26
0
Spread the love

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் பிற்பகல் வேளையில் இடிமின்னதுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு வானில் மேகமூட்டம் அதிகரித்து, ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. இப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here