ஹட்டனில் எரிவாயுவுக்காக நீண்ட வரிசை

9
0
Spread the love

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் சில நாட்களுக்குப் பின்னர் நேற்று (நவம்பர் 2) லிட்ரோ எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நகரிலுள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களில் எரிவாயு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, அதனை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.

எனினும், அங்கு வந்திருந்த அனைத்து நுகர்வோருக்கும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனத்தினால் கடைகளுக்கு நூறுக்கும் குறைவான சிலிண்டர்களே வழங்கப்பட்டதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் எரிவாயுவை விநியோகிக்க முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here