நாடாளுமன்ற நுழைவாயிலில் இன்று போராட்டம்

8
0
Spread the love

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் போராட்ட முன்னணியினால் இன்று (நவம்பர் 4) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

குறித்த இரண்டு சட்டமூலங்களையும் எந்தவித திருத்தங்களும் இன்றி முழுமையாக மீளப்பெற வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (நவம்பர் 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதுடன், அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here