ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து ஆலயத்தை மீளக் கட்டித்தர ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்

8
0
Spread the love

ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து ஆலயத்தை உடனடியாக மீளக் கட்டித்தர வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு ஈரோஸ் கட்சி கடும் எச்சரிக்கை
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் பள்ளிவாசல் மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலாக உரிய காணிகளைத் திரும்ப வழங்குவதுடன் அங்கு புதிய இந்து ஆலயம் ஒன்றையும் உடனடியாக மீளக் கட்டித் தருமாறு ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடியில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரியச் சொத்தான இந்து ஆலயத்திற்குரிய காணி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா தொடர்ந்தும் மௌனம் காப்பதைத் தவிர்த்து, உடனடியாகத் தகுந்த தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றார். அந்த நிலம் குறித்த தனியார் சொத்துரிமைக் கடிதங்கள் தன்னிடம் உள்ளதாகவும், எனினும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஒரு இந்து ஆலயத்தை வலுக்கட்டாயமாக அமைக்கும் பண்பாடற்றவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதான வீதிக்கு அருகில் மாற்று நிலத்தைப் பெற்றுக்கொடுத்து, குறித்த கோயிலை உடனடியாக மீளமைத்துக் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஹிஸ்புல்லா மற்றும் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர்கள் இணைந்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறில்லாவிட்டால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டரீதியான வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், அதற்கான அனைத்துத் வலுவான ஆதாரங்களும் தம்பவசம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here