2027 முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்

24
0
Spread the love

புதிய கல்விச் சீர்திருத்தங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளுக்கான நேர அட்டவணைகளில் அவசியமான மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாகப் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக ஏற்கெனவே முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், 5ஆம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் 2030ஆம் ஆண்டும், க.பொ.த. சாதாரண தரத்துக்கான புதிய பாடத்திட்டம் அதே ஆண்டிலும், உயர்தரத்துக்கான கல்விச் சீர்திருத்தங்கள் 2033ஆம் ஆண்டிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை மட்டுமே என மாற்றியமைக்கப்படவுள்ளது. அத்துடன், மூன்றாம் மற்றும் நான்காம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், ஐந்தாம் ஆண்டு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்தப் புதிய சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here