நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்

15
0
Spread the love

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை காணப்படும் எனவும், கடல் பிராந்தியங்களில் வடகிழக்கில் இருந்து வீசும் காற்றுடன் இடைக்கிடையே கொந்தளிப்பான நிலை நிலவக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here