மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

58
0
Spread the love

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14.08)  இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், முச்சக்கர வண்டியில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here