தனியார் துறை சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி அறிவிப்பு

20
0
Spread the love

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கும் தனியார் துறை ஊழியர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தனியார் துறை தொழில் வழங்குநர்களுடன் வெற்றிகரமாகக் கலந்துரையாடி சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வணிகச் சங்கங்களுடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைகளைத் தொடர்ந்து, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஊழியர்களின் மேலதிகக் கொடுப்பனவுகள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுவோர் மீதான உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE Tax) தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒரு இலட்சம் ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பு பின்னர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேலதிக வரி நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த வரம்பை மேலும் தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here