தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் ஏற்பாட்டில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (09) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுகின்ற 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூட்டுப் பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்தி நுளம்பு பெருகும் இடங்களை அழித்தல், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்யும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து, பொது நிர்வாக அமைச்சு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம், பொலிஸார், முப்படையினர் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து இத்திக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளன.







