காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து; 7 படகுகள் தீக்கிரை

19
0
Spread the love

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புப் பகுதியில் இன்று (08) பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். காலி துறைமுகப் பொலிஸார், இலங்கை கடற்படையின் ‘தக்ஷிண’ முகாம் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீன்பிடிச் சமூகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாகத் தீயானது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் எத்தகைய காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என காலிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஜி.ஏ. புஷ்பகுமார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அந்த வளாகத்தில் பயன்படுத்தப்படாத படகுகள் நிறுத்தப்பட்டிருந்த காரணங்கள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இது தொடர்பான விரிவான அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தீ விபக்கான முழுமையான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காலி துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here