கம்பஹா மாவட்டத்தின் 9 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

18
0
Spread the love

அத்தனகலு ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, கம்பஹா மாவட்டத்திலுள்ள 9 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. திவுலபிட்டிய, மிரிகம, அட்டனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இந்த வெள்ள எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பாதைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here