நியாயமான வரிக் கொள்கை கோரி தொழில் வல்லுநர்கள் வலியுறுத்தல்

25
0
Spread the love

மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் தற்போதைய வரி முறையை மாற்றி, நியாயமானதொரு வரிக் கொள்கையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. வணிகர்களின் செலவுகளைக் கழித்த பின்னரான இலாபத்தின் மீது மட்டுமே வரி அறவிடப்படும் நிலையில், சம்பளம் பெறுவோரின் மொத்த மாத வருமானத்தின் மீது முழுமையாக வரி விதிக்கப்படுவது அநீதியான நடைமுறை என அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில் வல்லுநர்கள் வரியிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுவதைக் கோரவில்லை மாறாகச் செலுத்தக்கூடிய நியாயமான வரி முறையையே எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தற்போதைய வரி முறையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, சம்பளம் பெறும் ஊழியர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்கப்படுமென அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here