சர்வதேச சந்தைத் தாக்கத்தால் உள்நாட்டில் சரிவடைந்த தங்கத்தின் விலை

87
0
Spread the love

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையின் எதிரொலியாக, உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் சில நாட்களுக்கு முன்னர் 4,100 டொலர்களைத் தாண்டியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது 3,900 டொலர்களாகக் குறைந்துள்ளதே இந்த விலைக்குறைப்புக்கு முக்கிய காரணமாகும்.
கொழும்பு செட்டியார் தெரு வர்த்தக நிலவரங்களின்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 331,200 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here