நீதிபதிக்கு எதிரான அவமதிப்பு விமர்சனத்தைக் கண்டித்து திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்

65
0
Spread the love

திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீனால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை விமர்சித்தும், நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையிலும் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக ஒன்றிணைந்த பெருமளவிலான சட்டத்தரணிகள், நீதித்துறையின் கௌரவத்தையும் சுயாதீனத்தன்மையையும் எவ்வித அழுத்தங்களுக்கும் பலிகொடுக்காமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிராக எவரும் செயற்படக் கூடாது எனவும், நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here