பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரும் மயிலிட்டி மக்களின் போராட்டம் 30ஆவது வாரத்தை எட்டியது

21
0
Spread the love

தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து மீள்குடியேற அனுமதிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தற்போது 30ஆவது வாரத்தை எட்டியுள்ளது. சுமார் 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் இழந்து தவித்து வரும் மக்கள், மயிலிட்டி இராணுவ கொமாண்டா பங்களாவுக்கு முன்பாகத் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தலைமுறைகளாக வாழ்ந்த சொந்த மண்ணில் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்களைச் செய்ய முடியாமல் மக்கள் தொடர்ந்தும் சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவித்து மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here