2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று

48
0
Spread the love

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை 6.00 மணிக்குப் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்று வரை ஏழு நாட்களாக இரண்டாம் வாசிப்பு விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, குழு நிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு விவாதம் நாளை (21) ஆரம்பமாகி டிசம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய நாட்களிலும் காலை 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here