கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சந்தேகநபரான நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது







