யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை (19) இரவு சக மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன் பிளேட்டினால் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 21 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப்பாய் பொலிஸார் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும் பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 21 மாணவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







