வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம்

54
0
Spread the love

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, அரச சேவையின் பல தொழிற்சங்கங்கள் நாளை (23) நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதுடன், உரிய பதில் வழங்கப்படாவிட்டால் நவம்பர் 30 ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை மூட நேரிடும் என ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக நாளை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதுடன் நவம்பர் 30 ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் கூறியுள்ளார். அத்துடன், நாளைய போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் தொழிலாளர் போராட்ட நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ, நவம்பர் 30 ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் மற்றும் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், உரிய பதில் கிடைக்காவிட்டால் மேலும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here