இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (20.06) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது சேவைத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தவறவிட்ட வாய்ப்புகளைப் பின்தொடர்வதைத் தாண்டி, புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதே முதலீட்டு சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டி காட்டினார்.
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அ இலங்கை முதலீட்டு சபை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.









