நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

23
0
Spread the love

வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து இந்தியாவின் நச்சுப் புகை விலகிச் சென்றுள்ளதால், நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பல பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், குறிப்பாகப் பல நாட்களாக 200 வரை பதிவாகியிருந்த யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்து, சுகாதார பாதிப்புகள் மிகக் குறைவான நிலைக்கு வந்துள்ளதாக அச்சபையின் தரவுகள் குறிப்பிடுகின்றன. எனினும், கொழும்பு மாவட்டத்தின் பத்தரமுல்ல பகுதியில் காற்றின் தரச்சுட்டெண் 92 ஆகவும், பதுளை எல்ல பகுதியில் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அளவில் 119 ஆகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here