நவம்பர் மாதத்திற்கான முழுநிலவு நிகழ்வு இலங்கையில் இன்று (24) இரவு உச்சநிலையை அடையவுள்ளது. சர்வதேச வானியல் மரபில் நவம்பர் முழுநிலவு ‘பீவர் மூன்’ (Beaver Moon) என அழைக்கப்படும் நிலையில், இலங்கையின் வானில் இன்று இரவு 8.23 மணியளவில் முழுநிலவு முழுமையான நிலையை எட்டுகிறது. வட அமெரிக்காவில் குளிர்காலத்திற்கு முன்னதாக நீர்ப் புள்ளிகள் மற்றும் அணைகளைக் கட்டும் ‘பீவர்’ எனப்படும் விலங்குகளின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர் வழக்கத்தில் வந்துள்ளதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளில் இரவு முழுவதும் இந்த முழுநிலவுக் காட்சியைக் கண்குளிரக் காண முடியும்.







