இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 4.36 மணியளவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில், தெற்கு 17.78 பாகை அட்சரேகை மற்றும் கிழக்கு 65.82 பாகை தீர்க்கரேகையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு முதலில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.







