கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு

20
0
Spread the love

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்த பின்னரே தேர்தலுக்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இரு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய திகதியாக அடுத்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதியை நிர்ணயித்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வட்டாரங்களை அறிவிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே தேர்தலுக்கான வேட்புமனுக் கோரல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here