இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விவசாயம், மீன்பிடி, உணவு பதப்படுத்தல், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோவுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் நடத்திய சந்திப்புகளின்போது, இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரைவுபடுத்துவது, கடல்வழி இணைப்பை மேம்படுத்துவது, தொழில்வாய்ப்பு ஒத்துழைப்பு மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன







