ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, விபத்துக்குள்ளானதில்
இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி இன்று (23) அதிகாலை விபத்துக்குள்ளானது.
இதன்போது காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக பயணித்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிறுமியின் தாயார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







