ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு

61
0
Spread the love

 

செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது.

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி , யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு நேற்றைய தினம் புதன்கிழமை (25.06) யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த  வோல்கர் டர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here