திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27.06) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







