இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தரமற்றவை

59
0
Spread the love

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு அடங்கிய 05 கொள்கலன்களை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த உப்பு தொகை இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த 05 கொள்கலன்களும் தரமற்றவை என வௌிக்கொணரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000  கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here