பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று காலையில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக
தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
105 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 5.28 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 126.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்
இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.







