சடலமாக மீட்கப்பட்ட 02 மீனவர்கள்

55
0
Spread the love

 

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்துக்குள்ளானபோது காணாமற்போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில் 06 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here