யாழ்ப்பாணம் – முலவைச் சந்திக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று புதன்கிழமை(09.07) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 48 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் நேற்றிரவு சிலருடன் மதுபானம் அருந்தியமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







