இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலிருந்தான வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு பிரித்தானியா பல புதிய வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது.
இந்த நடவடிக்கை ஊடாக இலங்கையிலிருந்து ஆடை மற்றும் உணவு உள்ளிட்ட பல பொருட்களை வரியின்றி பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்ய முடியும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை,நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் பொருட்களை வரியின்றி பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்ய முடியும்
மேலும் பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்தும் ஆடைகள் மற்றும் மின்சாதனங்களை வரியின்றி இறக்குமதி செய்ய முடியும்.






