யுவதிகள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படும் இரத்தசோகை ஒரு கடினமான பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு இலகுவில் தீர்வு காண முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
‘போஷாக்கு மிக்க தெற்காசியா’ எனும் தலைப்பில், கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், ” இரத்தசோகையால் பெண்கள் பாதிக்கப்படாத தெற்காசியாவை உருவாக்குவது தமது இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சகல சிறுமிகளுக்கும் போஷாக்கு மிக்க உணவு, சுகாதாரக் கல்வி மற்றும் தரமான பராமரிப்பு ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும்
கூறினார்.
இதேவேளை, பெண்களுக்கு அவர்களின் முழுத் திறனையும் உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில், மனிதநேயம் மிக்க சுற்றாடலை உருவாக்க வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.







