ரயிலில் மோதுண்டு உயிரிழந்த காட்டு யானை

50
0
Spread the love

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து கல்லெல்ல பகுதியில் இன்று  (18.07) காலை இடம் பெற்றுள்ளது.

இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை உடைத்து அவற்றினுள் நுழைந்து நெல்லை உணவாக உட்கொள்வதாகவும், இன்று அதிகாலை 3.00 மணி முதலே காட்டு யானை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாகவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காட்டு யானை கிராமத்திற்கு அடிக்கடி வருவதாகவும், வனவிலங்குத் திணைக்களம் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற ஒரு துயரம் நிகழ்ந்திருக்காது என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு இறந்த காட்டு யானை சுமார் 15 வயதான 8 அடி உயரமானது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here