சீதுவை பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவை நகரசபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது காயமடைந்த 55 வயது நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீதுவை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







