தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

73
0
Spread the love

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அஸ்கிரிய மஹா விகாரையின் உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா தேரரின் நினைவு மண்டபத்திற்கு நேற்று இரவு (22.07 ) சென்ற ஜனாதிபதி, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அஸ்கிரிய விகாரையின் மகா சங்கத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

அஸ்கிரிய மஹா விகாரையின் மகா நாயக்கர் அதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

அஸ்கிரிய மகாநாயக்க மகா விகாரையின் அனுநாயக்கராக பதவி வகித்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தனது 67 ஆவது வயதில் கடந்த 20 ஆம் திகதி காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here