விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

57
0
Spread the love

 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்
நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 12 கிலோ கிராம் 196 கிராம் நிறையுடைய ஹஷீஷ் மற்றும் 05 கிலோ 298 கிராம் நிறையுடைய கொக்கேய்ன்
போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர் கனடாவிலிருந்து கத்தார், தோஹாவிற்கு போதைப்பொருள் தொகுதியைக் கொண்டு சென்று அங்கிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளார்.

கனேடிய பிரஜையான 52 வயதுடைய நபரே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here