தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே அண்மையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர்
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள வீடொன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று (25.07) அதிகாலை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து
விசேட அதிரடிப் படையினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படையினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







