வன்மையாக கண்டித்த தென்கொரிய ஜனாதிபதி
தென்கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமையை அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே-மியுங் வன்மையாக கண்டித்துள்ளார்.
எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ், 2024 ஆம் ஆண்டில் இல் தென்கொரியாவுக்கு சென்ற இலங்கையர், சக ஊழியருக்கு தொழிலை உரிய முறையில் கற்றுக்கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே, ஏனைய ஊழியர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சக ஊழியர்களால் கட்டி வைக்கப்பட்டுஅவர் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், அவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலானது.
இதனைத் தொடர்ந்து கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளர் உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.







